ஆந்திராவில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை அறையில் அடைத்து வைத்து கொதிக்கும் எண்ணையை ஊற்றிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏலூர் பகுதியைச் சேர்ந்த அனுதீப், அதேப்பகுதியைச் சேர்ந்த பிடெக் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணவியிடம் தனியாக பேச வேண்டுமென கூறி அழைத்துச் சென்று தனது வீட்டின் அறையில் அடைத்து வைத்து காதலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை ஏற்க மறுத்த மாணவி மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றியும் தாக்கியுள்ளார்.
அவனது பிடியிலிருந்து தப்பிய மாணவி அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.