நியூயார்க் : அமெரிக்காவில், ‘டெல்டா ஏர்லைன்ஸ்’ விமானத்தில் பயணித்த 61 வயது முதியவர், மது போதையில், விமான பணியாளரை முத்தமிட்டு, தகராறில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து, அலஸ்காவிற்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சமீபத்தில் சென்றது. இதில், முதல் வகுப்பில் பயணம் செய்த டேவிட் ஆலன் பர்க், 61, என்ற பயணி, விமானம் புறப்படுவதற்கு முன்பே மது அருந்தினார்.
போதையில் இருந்த அவர், அங்கிருந்த ஆண் விமான பணியாளருக்கு முத்தம் கொடுத்து தகராறில் ஈடுபட்டார். மேலும், விமானிக்கு எடுத்துச் சென்ற உணவையும் கீழே தட்டி விட்டார். விமானம் தரையிறங்கியதும், முதியவர் டேவிட் ஆலன் பர்க்கிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால், ‘விமானத்தில் நான் எதுவுமே செய்யவில்லை’ என, அவர் கூறினார்.
எனினும், மது அருந்தியதை அவர் ஒப்புக் கொண்டார். இதன் பின், முதியவர் டேவிட் ஆலன் பர்க்கை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement