12 மணிநேர வேலை சட்டம்: தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு..!

தமிழக சட்டசபையில் தொழிலாளர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக உயர்த்தி கொண்டு வரப்பட்ட மசோதாவுக்கு கூட்டணி கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சட்டசபையில் கடும் எதிர்ப்புக்கும் பிறகும் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் பெரும் முதலாளிகள் மூலம் தொழிலாளர்கள் உழைப்பை சுரண்டும் இந்த மசோதாவை திரும்ப பெறக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும், தொழிற் சங்கங்களும் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். ஆனால், தமிழக அரசு இந்த மசோதாவில் இருக்கும் சலுகைகளை சுட்டிக்காட்டி மசோதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

தமிழக சட்டசபை மானிய கூட்டத்தொடர்; சபாநாயகர் அப்பாவு கலகல பேட்டி!

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இன்று சென்னையில் இதுகுறித்து ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில், போராட்டம் குறித்து வரும் 27ம் தேதி முதல் நோட்டீஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, மே 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

12 மணி நேர வேலை சட்டம் குறித்து தமிழக அரசு அளித்துள்ள விளக்கம்

எந்த ஒரு தொழிற்சாலையாக இருந்தாலும், நிறுவனமாக இருந்தாலும் அங்கு பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இது நடைமுறைப்படுத்தப்படும். தொழிலாளர்களுக்கு விருப்பம் இல்லை என்றால், நிச்சயமாக அரசு பரிசீலனை செய்து ஆய்வு செய்து தான் நடைமுறைப்படுத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாரத்தில் 48 மணி நேரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இன்னொன்று, எல்லா நிறுவனங்களுக்கும் இந்த சட்டத்திருத்தம் பொருந்தாது. எந்த நிறுவனம், எந்த தொழிற்சாலை விரும்புகிறதோ அந்தத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே இது பொருந்தும். 12 மணி நேரம் என வாரத்தில் நான்கு நாட்கள் வேலை செய்தால் மீதி இருக்கிற அந்த மூன்று நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.