தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்ட தொடரின் கடைசி நாளில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத் திருத்த மசோதா சட்டமாகினால், 8 மணி நேர வேலை என்பதை 12 மணி நேரமாக மாற்றப்பட்டு, தொழிலாளா்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துவிடும் என்று, அதிமுக, பாமக மற்றும் திமுகவின் கூட்டணி காட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், 12 மணி நேரம் வேலை சட்டத்திருத்தம் வரவேற்கத்தக்கது என்று, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவரும், விருகம்பாக்கம் திமுக எம்எல்ஏ.,வின் தந்தையுமான விக்கிரமராஜா தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா தெரிவித்தாவது, “தொலை நோக்கப் பார்வையுடன் இந்த மசோதாவைக் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதனை வணிகர்கள் நாங்கள் வரவேற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இன்று சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் 12 மணி நேர வேலைச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியறுத்தி வரும் மே மாதம் 12ல் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.