Khushbu: நான் அந்த 2 நடிகர்களுடன் சேர்ந்து இதுவரை நடித்தது இல்லை: குஷ்பு

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Khushbu interview: தெலுங்கு திரையுலகின் இரண்டு முக்கிய நடிகர்களுடன் சேர்ந்து இதுவரை நடித்ததே இல்லை என தெரிவித்துள்ளார் குஷ்பு.

​குஷ்பு​தமிழ் தவிர்த்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் குஷ்பு. கோபிசந்த், டிம்பிள் ஹயாத்தி, ஜெகபதி பாபு உள்ளிட்டோருடன் சேர்ந்து குஷ்பு நடித்திரு்கும் தெலுங்கு படம் Rama Banam. அந்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் குஷ்பு கூறியிருப்பதாவது, தெலுங்கு திரையுலகம் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாறியதால் தான் தெலுங்கு படங்களில் அதிக அளவில் நடிக்க முடியாமல் போனது என்றார்.

​மேக்கப்​குஷ்பு மேலும் கூறியதாவது, ஏற்கனவே என் குடும்பத்தாரை மும்பையில் இருந்து சென்னைக்கு வரவழைத்தேன். அவர்களை மீண்டும் ஹைதராபாத்தில் செட்டில் செய்ய விரும்பவில்லை. தற்போது எல்லாம் மாறிவிட்டது. ஒரு காலத்தில் நாங்கள் இருட்டு அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மேக்கப் போட்டோம். பாத்ரூமில் உடை மாற்றினோம். மேக்கப் இல்லாதபோது மஞ்சள் பொடியை வைத்து முகத்தில் கலர் கரெஷ்கஷன் செய்தோம். கோவில் காட்சிகளுக்கு அது பெரிதும் கை கொடுத்தது. தற்போது கிராஃபிக்ஸ் இருக்கிறது. ஆனால் நாங்கள் ஒரிஜினலாக செய்தோம் என்றார்.
​சிரஞ்சீவி​நான் நிறைய தெலுங்கு படங்களில் நடிக்க விரும்புகிறேன். கதாபாத்திரங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்வேன். ஒரு கதாபாத்திரம் பத்து நிமிடங்களே வந்தாலும் கூட அது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். சிரஞ்சீவி, பாலகிருஷ்ணாவுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. சரியான ஸ்க்ரிப்ட் கிடைத்தால் நடிக்க நான் ரெடி என்றார் குஷ்பு.
​தொழில் அதிபர்​Rama Banam படத்தில் தொழில் அதிபர் புவனேஸ்வரியாக நடித்திருக்கிறார் குஷ்பு. குடும்பம் தான் முக்கியம் என இருக்கும் கதாபாத்திரம் அவருடையது. தான் நிஜ வாழ்க்கையில் இருப்பதை போன்றே அந்த கதாபாத்திரம் இருப்பதாக குஷ்பு தெரிவித்துள்ளார். குடும்ப ஆடியன்ஸை மனதில் வைத்து Rama Banam படத்தை எடுத்திருக்கிறார்கள். குஷ்பு நடிப்பில் கடைசியாக வெளியான தெலுங்கு படம் Aadavallu Meeku Johaarlu Vakula. 2022ம் ஆண்டு வெளியான அந்த படத்தில் ரஷ்மிகா மந்தனாவின் தாயாக நடித்திருந்தார்.
வெங்கடேஷ்பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் குஷ்பு அரசியல் வேலையுடன், நடிப்பு வேலையையும் அழகாக பார்த்துக் கொண்டிருக்கிறார். விக்டரி வெங்கடேஷின் முதல் படமான Kaliyuga Pandavulu தான் குஷ்பு நடித்த முதல் தெலுங்கு படமாகும். அந்த படம் மூலம் தான் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார் குஷ்பு.

​சின்னதம்பி​Khushbu: சின்னதம்பி ரிலீஸாகி இன்றுடன் 32 வருஷமாச்சு: ஆனால் குஷ்புவுக்கு வயசு மூவாறு தான்பி. வாசு இயக்கத்தில் இளைய திலகம் பிரபவுடன் சேர்ந்து குஷ்பு நடித்த சின்னதம்பி படம் ரிலீஸாகி 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. அது குறித்து அவர் அண்மையில் ட்வீட் செய்தார். சின்னதம்பி பட வாய்ப்பை கொடுத்த வாசுவுக்கு நன்றி தெரிவித்திருந்தார். குஷ்புவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ, சின்னதம்பி ரிலீஸாகி 32 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றே நம்ப முடியவில்லை. சின்னதம்பிக்கு 32 வயதாகிவிட்டது. ஆனால் அதில் நடித்த குஷ்புவுக்கு இன்னும் 18 வயது தான். உங்களை பார்த்தால் வளர்ந்த இரண்டு பிள்ளைகளுக்கு தாய் என்றே தெரியவில்லை. அவர்களுக்கு அக்கா போன்று மிகவும் இளமையாக இருக்கிறீர்கள். கண்ணு படப் போகுது. சுத்திப் போடுங்க என்றார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.