வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டோக்கியோ : ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறியும் வகையில், ‘கிரையிங் சுமோ’ என்ற போட்டி ஜப்பானில் நேற்று நடந்தது.
கிழக்காசிய நாடான ஜப்பானில், ‘கிரையிங் சுமோ’ எனப்படும் குழந்தைகளை அழ வைக்கும் போட்டி நடத்தப்படுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த போட்டி நேற்று மீண்டும் நடத்தப்பட்டது.
டோக்கியோ நகரின் சென்சோஜி கோவிலில் நடந்த இந்த போட்டியில், 6 – 18 மாத குழந்தைகள் பங்கேற்றனர். குழந்தைகளை ஆரோக்கியமான வகையில் வளர்ப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் பாரம்பரியமாக ஜப்பானில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.
![]() |
ஜப்பானில் ‘சுமோ’ என்ற மல்யுத்த போட்டி பாரம்பரிய விளையாட்டாக கருதப்படுகிறது. இந்த போட்டிகளை நடத்துவற்காக அமைக்கப்பட்ட மேடைகளில் குழந்தைகளுக்கான போட்டி நடந்தது.
போட்டியின் போது குழந்தைகளை பெற்றோர் கையில் ஏந்தியிருந்தனர். அவர்களை முகமூடி அணிந்த நபர்கள் அழ வைத்தனர். முதலில் அழுத குழந்தை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் 64 குழந்தைகள் பங்கேற்றன.
இது குறித்து போட்டி ஏற்பட்டாளர் கூறியதாவது:
ஜப்பானில் பல்வேறு இடங்களில் நடக்கும் போட்டியில் விதிமுறைகள் மாறுபடுகின்றன.
சில இடங்களில் முதலில் அழும் குழந்தை வெற்றி பெற்றதாகவும், வேறு சில இடங்களில் முதலில் அழும் குழந்தைகள் தோல்வி அடைந்ததாகவும் கருதப்படுகின்றனர்.
வேறு சில இடங்களில் நீண்ட நேரம் சத்தமாக அழும் குழந்தை வெற்றியாளராக கருதப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பின் இந்த போட்டி நடப்பதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement