புதுடில்லி, கிழக்கு லடாக் எல்லை பகுதியில் எஞ்சியுள்ள பிரச்னைகள் குறித்து இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை விரைவில் உருவாக்க, இந்தியா – சீனா ஒப்புக்கொண்டுள்ளன.
கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா – சீன ராணுவத்துக்கு இடையே தொடர்ந்து வரும் பிரச்னைக்கு தீர்வு காண, ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான 18வது சுற்று பேச்சு நேற்று முன்தினம் நடந்தது.
இது குறித்து நம் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
கிழக்கு லடாக் எல்லை பகுதியில் இந்தியா – சீனா இடையே நிலவும் பிரச்னைகள் குறித்து நேற்று முன் தினம் நடந்த பேச்சில் வெளிப்படையான, ஆழமான விவாதம் நடந்தது.
அப்போது, இருதரப்பும் நெருங்கிய தொடர்பில் இருக்கவும், ராணுவம் மற்றும் துாதரக அளவிலான பேச்சின் வாயிலாக இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட ஒப்புக்கொள்ளப்பட்டது.
கிழக்கு லடாக் எல்லையின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பது இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement