மலேரியா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.நா சார்பில் 2007 முதல் ஆண்டு தோறும் ஏப். 25ல் உலக மலேரியா தினம் கடைபிடிக்கப்படுகிறது. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி மூலமாக மலேரியா ஏற்படுகிறது.
சமீபகாலமாக மலேகரியாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மலேரியாவின் இறப்பு வகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பிளாகஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணி மூலமாக மலேரியா ஏற்படுகிறது. இந்த ஒட்டுண்ணி அனோபிலிஸ் எனும் பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக்கொள்கிறது. பின் இந்த கொசு ஒருவரை கடிப்பதின் மூலம், மலேரியா பரவுகிறது. இந்நோய், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. இது உடலில் கல்லீரலை தாக்குகிறது. பின் ரதத் சிவிப்பு அணுக்களை தாக்கி அழிக்கிறது. மரணத்தை
மலேரியா கொசுகடித்து 10 முதல் 15 நாட்களுக்குள் காய்ச்சல் , தலைவலி வாந்தி போன்றவை ஏற்பட்டால் மலேரியா நோய் தாக்கியுள்ளது என தெரிந்து கொள்ளலாம். ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தொடர் சிகிச்சை அவசியம். ஏனெனில் நோய் முற்றும் போது உடலுறுப்புகளுக்கான ரத்த ஓட்டம் தடைபட்டு உயரிழப்பு ஏற்படுகிறது.
முற்றிலுமாக தடுக்க முடியாவிட்டாலும் மலேரியாவின் வீரியத்தை குறைப்பதற்கு குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தடுப்பு மருந்துகள் உள்ளன. தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசிற்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement