ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் திமுகவினருக்கு தொடர்புடையது பாஜக தரப்பில் புகார் வைக்கப்பட்ட நிலையில், இன்று ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும், சென்னையில் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினரின் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் உள்ள ஜி-ஸ்கொயர் நிறுவனங்களின் அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நஷ்டத்தில் இயங்கிய இந்த நிறுவனம், திமுக ஆட்சிக்கு வந்தபின் ஒரே நேரத்தில் அதிக அளவு நிலங்களைக் கையகப்படுத்தியதாகவும், அதிக வருமானம் ஈட்டி உள்ளதாகவும் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையில் செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு உள்ளர்னர்.
ஏற்கனவே, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் செட்டிநாடு குழுமத்தின் மீது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் வழக்குப்பதிவு உள்ளனர். அதில் 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாகவும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று மீண்டும் செட்டிநாடு குழுமத்தத்துக்குச் சொந்தமான 6 -க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு உள்ளர்னர்.