வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நைரோபி: கென்யாவில் பாதிரியார் ஒருவரது பண்ணையில் தோண்ட தோண்ட சடலங்களாக வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடலோர பகுதியான மாலின்டி நகரில் குறிப்பிட்ட மதப்பிரிவை பின்பற்றும் பாதிரியார் பால் மெகன்சி என்பவர் உள்ளார். அவருக்கு சொந்தமான பண்ணையில் 15க்கும் மேற்பட்டோர் உடல் மெலிந்து இருப்பதாகவும், அவர்களில் நான்கு பேர் இறந்து விட்டதாகவும் கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
பாதிரியாருக்கு சொந்தமான இடத்தில் 21 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பட்டினி கிடந்தால் இறைவனைச் சந்திக்க முடியும் என பாதிரியார் கூறியதை தொடர்ந்து, தாங்கள் பட்டினி கிடப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:
பாதிரியார் பால் மெகன்ஷியை கைது செய்துள்ளோம். ஏற்கனவே அந்த பகுதியில் குழந்தைகள் இறப்புக்கு காரணமான சம்பவம் தொடர்பாக, அந்த பாதிரியார் இரண்டு முறை கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலையாகியிருந்தார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement