கொச்சி வாட்டர் மெட்ரோ: இந்தியாவிலேயே இதுதான் ஃபர்ஸ்ட்… இதுல இவ்ளோ விஷயமிருக்கா?

கேரள மாநிலத்திற்கு இன்று பிற்பகல் பிரதமர் மோடி வருகை புரிகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நாளை (ஏப்ரல் 25) காசர்கோடு டூ திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். கூடவே நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையை கொச்சியில் தொடங்கி வைக்கவுள்ளார். அதென்ன வாட்டர் மெட்ரோ? கேட்கவே புதிதாக இருக்கிறது அல்லவா? இதைப் பார்க்கும் போது அப்படியே மெட்ரோ ரயில் சேவை போலத் தான் காட்சி அளிக்கிறது.

கொச்சியில் வாட்டர் மெட்ரோகண்ணாடியில் மூடப்பட்டு முழுவதும் குளிரூட்டப்பட்ட எலக்ட்ரிக் படகுகளாக இயக்கப்படவுள்ளன. இதன்மூலம் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே சொகுசாக பயணம் மேற்கொள்ளலாம். சுருக்கமான சொல்ல வேண்டுமெனில் படகு சேவையை மெட்ரோ ரயில் தரத்தில் அளிக்கவுள்ளனர். இதை கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனம் முன்னெடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்க்கு வரவேற்பு
10 தீவுகளை இணைக்கிறது1,137 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த கே.எஃப்.டபிள்யூ, கேரள அரசு, கொச்சி மெட்ரோ ஆகியவை கைகோர்த்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. இந்த வாட்டர் மெட்ரோ சேவையானது கொச்சி துறைமுகம் மற்றும் அதனை சுற்றியுள்ள 10 சிறிய தீவுப் பகுதிகளை இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது.​
​வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: திருவனந்தபுரம் டூ காசர்கோடு ரூட்… வெளியானது நேர அட்டவணை!​
எலக்ட்ரிக் ஹைபிரிட் படகுகள்ஒவ்வொரு தீவிலும் மெட்ரோ ரயில் நிலையங்களை போலவே 38 முனையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு படகிலும் சுமார் 100 பேர் வரை பயணம் செய்யலாம். முதல்கட்டமாக 8 எலக்ட்ரிக் ஹைபிரிட் படகுகள் இயக்கப்படவுள்ளன. இவற்றை கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. தற்போது வரை 78 ஹைபிரிட் படகுகள் தயாரிக்கப்பட்டு தயாராக இருக்கின்றன.
உலகின் முதல் கடல்வழி எலக்ட்ரிக் படகு சேவை
​சுற்றுலா பிளஸ் உள்ளூர் போக்குவரத்துஇதில் மிகவும் நவீன அம்சங்கள் கொண்ட லித்தியம் டைட்டானைட் ஸ்பைனல் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நீர் வழித்தடத்தில் குறைந்த கட்டணத்தில் சிறப்பான சேவையை வழங்குகிறது. இதை சுற்றுலாவிற்கு மட்டுமின்றி உள்ளூர் மக்கள் தினசரி போக்குவரத்திற்கும் பயன்படுத்தி கொள்ளலாம். இதன்மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க வழி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகபட்ச கட்டணம் ரூ.40தினசரி காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை வாட்டர் மெட்ரோ சேவை பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. தூரத்திற்கு ஏற்ப 20 ரூபாய் முதல் அதிகபட்சமாக 40 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 75 கிலோமீட்டர் தூரத்தை இணைக்கும் வகையில் 15 வழித்தடங்களில் வாட்டர் மெட்ரோ சேவை வழங்கப்படவுள்ளது.
Kochi1 மொபைல் ஆப்வாட்டர் மெட்ரோ சேவையை Kochi1 என்ற மொபைல் ஆப் மூலம் பயன்படுத்த முடியும். இது கொச்சி மெட்ரோ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. தினசரி சேவை மட்டுமின்றி, வாராந்திர, மாதாந்திர, 3 மாத சேவை ஆகியவற்றுக்கு சிறப்பு சலுகை பாஸ் பெற்றுக் கொள்ளலாம். தொடக்கத்தில் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை வாட்டர் மெட்ரோ சேவை கிடைக்க வழிவகை செய்யப்படும்.​
​திருப்பதி தரிசனத்தில் முக்கிய மாற்றம்… அலிபிரி டூ காளி கோபுரம்… இலவச டோக்கனுக்கு சீல்!​
​நீர்வழித் தடத்தில் புதிய புரட்சிஅதன்பிறகு படிப்படியாக சேவை விரிவுபடுத்தப்படும். இந்த திட்டம் தொடர்பாக பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், நீர்வழிப் போக்குவரத்தில் வாட்டர் மெட்ரோ மிகப்பெரிய புரட்சியாக அமையும். இது சுற்றுலா துறையை ஊக்குவிக்க பெரிதும் உதவும். ஆற்றலை சேமிக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் நகர்ப்புற போக்குவரத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.