சரக்கு பார்ட்டி: பேக் ஃபயர் ஆன திமுக.. ‘வாபஸ் வாங்கிட்டோம்’.. என்னப்பா நீங்க.!

சிறப்பு உரிமம் பெற்று திருமண மண்டபங்களில் மது விருந்து நடத்தலாம் என்ற அறிவிப்பை அரசு திரும்ப பெற்றது.

கள்’ளு என்பது வேற..மது வேற..சீமான் பேட்டி!

12 மணி நேர வேலை

வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளுக்காக தொழிலாளர்கள் உரிமையை பறிக்கும் 12 மணி நேர வேலை திட்டத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை

அரசு நிறைவேற்றியது, மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பலைகளை கிளப்பியது, அதைத் தொடர்ந்து நீர்வளம் உள்ள பகுதிகளை சிறப்பு திட்டங்கள் அமைக்க ஒதுக்கப்படும் என அறிவிக்கபட்டதும் திமுகவிற்கு மக்கள் மத்தியில் பெரும் கோப அலைகளை ஏற்படுத்தியது.

பேக் அடித்த அரசு

கூட்டணி கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கு பிறகு 12 மணி நேர வேலை மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக திமுக அரசு இன்று அறிவித்தது. இந்த சூழலில் மீண்டும் ஒரு சர்ச்சையில் திமுக இன்று மாட்டியது. திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், மாநாட்டு மையங்கள், விளையாட்டு மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பணம் கட்டி சிறப்பு உரிமம் பெற்று மது விருந்து நடத்தலாம் என்று தமிழக அரசு இன்று அறிவித்து, அரசிதழில் வெளியிட்டது. மதுவிலக்கு கோரும் தமிழ்நாட்டில் இத்தகைய அறிவிப்பு என்பது மிகுந்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. பாமக உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக அறிவித்தது. இந்தநிலையில் மீண்டும் திமுக அரசு பேக் அடித்துள்ளது.

சரக்கு பார்ட்டி

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘‘ வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைத்திருப்பதற்கும், பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், புதுதில்லி போன்ற சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளவாறு, தமிழ்நாட்டிலும் வழங்கிட 18-3-2023 அன்று அரசிதழில் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையில், திருமணக் கூடங்களும், இதர இடங்களும் இடம் பெற்றிருந்தன.

அரசு, இதுகுறித்து பெறப்பட்ட கருத்துக்களை கவனமுடன் பரிசீலித்த தமிழ்நாடு தற்போது அவற்றை நீக்கி, வணிக வளாகங்களில் (Commercial Complexes) உள்ள மாநாட்டு மையங்கள் (Convention centres), கூட்ட அரங்குகள் (Conference Halls) ஆகியவற்றில் நடைபெறும் தேசிய நிகழ்வுகள், பன்னாட்டு நிகழ்வுகள், உச்சி மாநாடுகள் மற்றும் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் விளையாட்டு மைதானங்கள் / விளையாட்டு அரங்குகளில் அந்த நிகழ்வுகள் நடைபெறும்போது மட்டும் மதுபானம் வைத்திருத்தல் மற்றும் பரிமாறுவதற்கான தற்காலிக உரிமம் வழங்கப்படும் என்று திருத்தப்பட்ட அறிவிக்கையினை இன்று வெளியிட்டுள்ளது.

அதேபோன்று, இதுகுறித்து மேற்குறிப்பிட்ட அரசிதழில் வெளியிடப்பட்டிருந்த வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும், இந்த திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.