வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சூடானில் உள்நாட்டு போரில் சிக்கியுள்ள, இந்தியர்களில் 500 பேர் அந்நாட்டு துறைமுகத்திற்கு வந்தனர். விரைவில் அவர்களை மீட்டு இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
வட ஆப்ரிக்க நாடான சூடானில், 2021 முதல் ராணுவ ஆட்சி நடக்கிறது.ராணுவ தளபதி அப்தெல் பத்தா அல் – புர்ஹான் மற்றும் துணை தளபதி முகமது ஹம்தான் டாக்லோ ஆகியோர் இடையே சில நாட்களுக்கு முன் பயங்கர மோதல் வெடித்தது. சூடானில் வசிக்கும் 4,000 இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை:
சூடானில் உள்நாட்டு போரில் சிக்கியுள்ள, இந்தியர்களில் 500 பேர் அந்நாட்டு துறைமுகத்திற்கு வந்தனர். சூடான் துறைமுகத்திலிருந்து இந்திய கடற்படை கப்பலில் 500 பேரை சவுதி அரேபியாவுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவிலிருந்து விமானப்படை விமானத்தில் 500 பேரும் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement