‘திருமண மண்டபங்களில் மதுபானம்…’ – அரசின் அறிவிப்பும் கண்டனங்களும்!
திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறலாம் என தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து அரசாணை வெளியாகியிருக்கியிருந்தது. அரசின் இத்தகைய அறிவிப்புக்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்
அதேசமயம் அமைச்சர் செந்தில்பாலாஜி, “சர்வதேச விளையாட்டுகள் தமிழ்நாட்டில் நடக்க வேண்டுமானால் இந்த அனுமதி அளிக்கப்பட வேண்டும். அதேபோல, திருமண மண்டபங்களில் திருமணம், மற்ற நிகழ்ச்சிகளில் மதுபானம் பயன்படுத்த அரசு எப்போதும் அனுமதிக்காது” என அரசு தரப்பிலிருந்து விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பான செய்திகளின் தொகுப்பு இங்கே…
“மதுபானங்களை வீடு வீடாக டோர் டெலிவரி செய்யலாம்!” – வானதி சீனிவாசன் பாய்ச்சல்
இதுதான் உலகம் வியக்கும் திராவிட மாடல் ஆட்சியா!?” – சீமான் காட்டம்
“கலாசாரத்தின் மீது திராவகத்தை வீசியிருக்கிறது திமுக அரசு” – இபிஎஸ் கண்டனம்
&
‘ஜி ஸ்கொயர்’ நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு!
கர்நாடக சட்டமன்றத் தேர்தல்; பாஜக-வின் கோரிக்கையை ஏற்று வேட்பாளரைத் திரும்பப் பெற்றது அதிமுக!
மிஸ்டர் கழுகு: ‘எல்லாமே போலியா?’ – திமுக உறுப்பினர் சேர்க்கை களேபரங்கள்!
‘ஆட்சியில் இருப்பதால் ஒரு கோடி புதிய உறுப்பினர் சேர்க்கையை மூன்றே மாத்தத்தில் முடித்துவிடலாம்’ என்று நினைத்தது தி.மு.க. ஆனால், புதிதாகச் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் பட்டியலைவிட, உறுப்பினர் சேர்க்கை குறித்த புகார்ப் பட்டியல்தான் தலைமைக் கழகத்துக்குக் கட்டுக்கட்டாக வருகிறதாம்.
இது குறித்த மிஸ்டர் கழுகு மேலும் தரும் எக்ஸ்க்ளூஸிவ் தகவல்கள்…
‘விஷயம் தெரியாமக் கூப்பிட்டுட்டோமே?’ – நிர்வாண சாமியார்… பதறிய அமைச்சர்!
‘பொறுமைக்கும் எல்லை இருக்கு…’ – தலைமையை எகிறவைத்த நெல்லை!
லோக்கலில் இருந்து இன்டர்நேஷனல்… ரூட்டை மாற்றிய மாஜியின் பினாமி!
அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
12 மணி நேர வேலை… நீதிமன்றத்தில் இந்தச் சட்டம் நிற்குமா?
தமிழ்நாட்டிலுள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்கும் சட்டத் திருத்த மசோதா, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்த மசோதாவுக்கு எதிராகப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இதைச் சட்டரீதியாக எதிர்க்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் சென்றால் என்னவாகும்..?
விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…
பிரபலங்களின் ப்ளூ டிக்கை மீண்டும் வழங்கிய ட்விட்டர்!
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு நிறுவனத்தின் நிதிநிலைமையை அதிகரிக்க எலான் மஸ்க் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். அதில் ஒன்று ப்ளூ டிக்கிற்கு கட்டணம் வசூலிப்பது.
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், துறைசார்ந்த முக்கிய நபர்கள் தங்களுடைய கணக்குகளை அதிகாரபூர்வமானது என அறிவிக்கும் வகையில் பெயருக்குப் பக்கத்தில் இந்த ப்ளு டிக் இருக்கும்.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
IPL 2023 Round Up: அமெரிக்காவில் விளையாடும் சூப்பர் கிங்ஸ் அணி!
2023 நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி, மேக்ஸ்வெல் மற்றும் டூ ப்ளெஸ்ஸிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இத்தொடரில் 5 வது முறையாக, 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியுள்ளனர்.
நேற்று, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டூ ப்ளெஸ்ஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் இணைந்து 127 ரன்கள் அடித்தனர். மேலும் இந்த ஜோடி, சி.எஸ்.கே அணிக்கு எதிராகவும் 126 ரன்களை எடுத்து அசத்தியது.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
கிரெடிட் கார்டு அபாயங்கள்..!
“கிரெடிட் கார்டு ஒரு கூர்மையான கத்தி போன்றது. கத்தியை யார் பயன்படுத்துகிறார், எதற்காகப் பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்து விளைவுகள் வேறுபடுகிற மாதிரி கிரெடிட் கார்டும் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து அதன் விளைவுகளும் வேறுபடும்.
அந்த வகையில், கிரெடிட் கார்டுகள் ஒரு தனிநபருக்கு உண்மையில் வரமா சாபமா..?
கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதில் உள்ள அபாயங்கள் என்னென்ன?
அந்த அபாயங்களில் சிக்காமல் இருப்பது எப்படி..?
என்பது குறித்து விவரிக்கிறது இந்த வார நாணயம் விகடன் இதழின் கவர் ஸ்டோரி…
சம்மர் சருமப் பிரச்னைகள்… சிம்பிள் தீர்வுகள்!
கோடை வரும்வரை அதற்காக ஏங்குவோம். வந்துவிட்டாலோ, அது ஏற்படுத்தும் அவதிகளால் தவிப்போம்.
சம்மரில் வரும் சருமப் பிரச்னைகளைச் சமாளித்து உங்களை எப்போதும் புத்துணர்வுடன் வைத்துக்கொள்வதற்கான வழிகளைச் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.
விஷால் எடுத்த புது முடிவு!
கொஞ்ச காலமாக பிரச்சனைகளில் சிக்கியிருந்த விஷால் இப்போது யோசித்து சில முடிவுகளை எடுத்திருக்கிறார். லைக்காவுடனான பிரச்னைகளை பேசித்தீர்த்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
கோலிவுட் ஸ்பைடர்: போட்டியில் முந்தும் பிரியா பவானி சங்கர்!