இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சட்டசபை தேர்தலை விரைவாக நடத்த அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும், தேர்தலை நடத்த பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசு மறுத்து வருகிறது.
இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் தேர்தல் பிரசாரத்தை இன்று முதல் தொடங்குவதாக முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளார் ஆசாத் உமர் தனது டுவிட்டரில், “தெஹ்ரீக்-இ-இன்சாப் தனது தேர்தல் பிரச்சாரத்தை நாளை (இன்று) அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளது. அவர்கள் (பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்) தயாராக இல்லாமல் இருக்கலாம் ஆனால் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.
Related Tags :