நாடு முழுவதும் ஒரு சிலர் மருத்துவம் படிக்காமல் போலியான சான்றிதழ்களை வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருகின்றனர். அதன் காரணமாக தவறான சிகிச்சையினால் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 18 நாட்களாக போலி மருத்துவர்கள் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூரில் மற்றும் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் தலா 12 போலி மருத்துவர்களும், சேலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் தலா 10 போலி மருத்துவர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 9 போலி மருத்துவர்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் 8 போலி மருத்துவர்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் 6 போலி மருத்துவர்களும், புதுக்கோட்டை மற்றும் தேனி மாவட்டத்தில் தலா 5 போலி மருத்துவர்களும், விழுப்புரம் திருவண்ணாமலை அரியலூர் மாவட்டங்களில் தலா 4 போலி மருத்துவர்களும், கள்ளக்குறிச்சி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலா 3 போலி மருத்துவர்களும், காஞ்சிபுரம் வேலூர், தர்மபுரி மாவட்டங்களில் தலா 2 போலி மருத்துவர்களும், கரூர், கோவை, நாமக்கல், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு போலி மருத்துவர்கள் என தமிழகம் முழுவதும் மற்றும் 103 ஒளி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், கைது செய்யப்பட்ட அனைவரும் மருத்துவம் படிக்காமல் போலியான சான்றிதழ்களை வைத்து மருத்துவம் பார்த்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.