தேர்தலில் கொடுக்கிற வாக்குறுதிகளை எல்லாம் ஒரு அரசு செய்துதான் ஆக வேண்டும். ஆனால் அதிலும் எதை முதலில் செய்ய வேண்டும் எதை மெல்ல மெல்ல செய்ய வேண்டும் என்ற கணக்குகளும் உள்ளன. மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் முக்கிய சலுகைகளைவிட, உயிருக்கு உலை வைக்கக்கூடிய விஷயங்கள் மீது கொடுத்த வாக்குறுதிகளைத்தான் ஒரு அரசு முதலில் நிறைவேற்ற வேண்டும்.
உதாரணம்; உயிர்களுக்கும், இயற்கைக்கும் கேடாக உள்ள ஒரு தொழிற்சாலையை மூடுவது. அந்த வகையில் நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு தரும் டாஸ்மாக் கடைகளை மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் முந்தைய தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதி இன்னமும் இணையத்தில் வட்டம் அடித்துக்கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக ஸ்டாலின் பேசிய பேச்சுக்கள் புரட்சிகரமாக இருந்தது. ஆனால், அந்த புரட்சி ஆட்சிக்கு வந்தபிறகு புஸ்வானமாகிவிட்டது என்கின்றனர். மது எதிர்ப்பு வாதியாக காட்டிக்கொள்ளும் ஸ்டாலின் குறைந்தபட்சம் கடைகளை குறைத்தால்கூட போதும் என்று மக்கள் நினைத்திருக்க, இனி எங்கும் மது எதிலும் மது என்ற ஒரு அறிவிப்பை இன்று வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். அவருக்கு தோதுவாக அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று அடித்த பல்டி வேற லெவல்.
டாஸ்மாக் கடை அமைக்க NTK எதிர்ப்பு: உசிலம்பட்டி எம்எல்ஏ ஆதரவு?
F.L 12 என்கிற சிறப்பு உரிமத்தை கட்டணம் கட்டி பெற்றுக்கொண்டால் திருமண மண்டபம், விளையாட்டு அரங்கம், பார்ட்டி ஹாலில் தாராளமாக மது வழங்கலாம் என்று உள்துறை செயலாளர் பணீந்திரரெட்டி இன்று வெளியிட்ட உத்தரவில் தெளிவாக இடம்பெற்றுள்ளது. ஆனால், அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, திருமண மண்டபங்களில் மது வழங்க அனுமதி இல்லை என்று முரணாக பதில் அளித்துள்ளார்.
அதேபோல, சர்வதேச விழாவில் மட்டும் மது வழங்க அனுமதி என்று கூறியுள்ளார் ஆனால் அரசு அறிவிப்பில். International / National என்றே குறிப்பிட்டுள்ளது. Household celebration, function , parties என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என்ன அர்த்தமாம்? இதுவும் சர்வதேசத்தில் வருகிறதா? IPL -ல் போட்டி போன்ற என்று குறிப்பிட்டுள்ளார். Guest, visitors , participants என்று GO -வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐபிஎல் பார்க்க வரும் அனைவரும் குடித்து விட்டு அமரும் படி இருப்பது சரிதானா? என்ற கேள்விகள் எழுகிறது. அரசு பிறப்பித்த உத்தரவை அமைச்சர் மறுப்பது யாரை ஏமாற்ற என்ற கேள்விகளை அடுக்குகின்றனர் சமூக ஆர்வலர்கள்.