12 மணி நேர பணி : சட்டம் மசோதாவை வாபஸ் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்ட தொடரின் கடைசி நாளில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத் திருத்த மசோதா சட்டமாகினால், 8 மணி நேர வேலை என்பதை 12 மணி நேரமாக மாற்றப்பட்டு, தொழிலாளா்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துவிடும் என்று, அதிமுக, பாமக மற்றும் திமுகவின் கூட்டணி காட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
மேலும், 12 மணி நேர வேலைச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியறுத்தி சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், வரும் மே மாதம் 12ல் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
இவ்வளவு எதிர்ப்பை தாண்டி தொழிலாளர் திருத்த மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றும் சட்ட மசோதாவை வாப ஸ் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்!#12hoursworking #TNGovt #MKStalin #Tamilnadu #DMK #MKStalin pic.twitter.com/Vo7arWbqJy
— Seithi Punal (@seithipunal) April 24, 2023
இந்நிலையில், 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றும் சட்டம் மசோதாவை வாபஸ் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது
தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.