சென்னை : நடிகர்கள் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஷோபிதா என முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் 2.
இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், இன்னும் சில தினங்களில் படத்தின் இரண்டாவது பாகம் ரிலீசாகவுள்ளது.
இதையொட்டிய பிரமோஷனல் டூரில் படத்தின் நடிகர், நடிகைகள் ஈடுபட்டுள்ளனர். கோவை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இவர்கள் பிரமோஷனல் டூரை முடித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் பிரமோஷனல் டூரில் அட்டகாசம் : நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஷோபிதா, பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள படம் பொன்னியின் செல்வன் 2 படம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இந்திய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது பொன்னியின் செல்வன் 2 படம்.
முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தப் படத்தின் முதல் பாகம் சர்வதேச அளவில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றுத் தநதுள்ளது. இந்தப் படத்திற்கு படக்குழுவினர் மிகச்சிறப்பாக பிரமோஷன்களை செய்திருந்த நிலையில், அதுவும் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது பாகத்தின் ரிலீசையொட்டியும் படக்குழுவினர் தற்போது பிரமோஷனல் டூரில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் துவங்கிய இந்தப் படத்தின் பிரமோஷனல் டூர், தொடர்ந்து கோவை, டெல்லி, கொச்சி, பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த டூரில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஜெயம்ரவி, ஷோபிதா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்து வருகின்றனர். இந்த பிரமோஷன்களில் படம் குறித்தும் தங்களது அடுத்த பிராஜெக்ட்கள் குறித்து சொந்த வாழ்க்கை குறித்தும் பல்வேறு விஷயங்களை இவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
தனி விமானம் மூலம் இவர்கள் அனைவரும் அடுததடுத்த இடங்களுக்கு சென்று வருகின்றனர். அப்படி செல்லும்போது, பல்வேறு கலாட்டாக்களையும் செய்து வருகின்றனர். அப்படி ஜெயம்ரவியிடம் வானதியை அவருக்கு எவ்வளவு பிடிக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், வானளவிற்கு பிடிக்கும் என்று கூறுகிறார். உடன் பக்கத்தில் அமர்ந்திருந்த சமுத்திரக்குமாரி, என்னது என்று அதிர்ச்சியாகிறார்.
Them😂❤️pic.twitter.com/8eANtkvUBU
— AmuthaBharathi (@CinemaWithAB) April 24, 2023
தொடர்ந்து அவரைப் பார்த்து ஜெயம்ரவி, என்ன ஜெலசா என்று கேட்பதாக அந்த வீடியோ காணப்படுகிறது. பின்புலத்தில் வடிவேலுவின் நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் என்ற வாய்சும் ஓடவிடப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த டீம் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெங்களூருவில் கார்த்தி உள்ளிட்ட படத்தின் நடிகர்கள் நடிகைகள் ஒருவரையொருவர் கட்டியணைத்து தங்களது நெகிழ்ச்சியை பகிர்ந்த காட்சியையும் காண முடிந்தது.