Rajini: இணையத்தில் லீக்கான தலைவர் 170 கதை..தரமான சம்பவத்திற்கு தயாரான தலைவர்..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்

​எதிர்பார்ப்புசமீபகாலமாக ரஜினியின் திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிகளை பெறவில்லை. எனவே தற்போது அவர் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் வெற்றிபெற்று தன்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து வரும் என மிகவும் நம்பியுள்ளார் ரஜினி. அந்த நமபிக்கைக்கு ஏற்றாற்போல ஜெயிலர் திரைப்படமும் உருவாகி வருகின்றது. நெல்சன் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகிவரும் ஜெயிலர் திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ரஜினியுடன் இப்படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். எனவே இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது

​லைன் அப்ஸ்ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் நடிக்கவுள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகர்களாக நடிக்க ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார். கிட்டத்தட்ட லால் சலாம் படத்தில் ரஜினி 40 நிமிடங்கள் வருவார் என தகவல்கள் வருகின்றன. இதைத்தொடர்ந்து ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இவ்விரு படங்களையும் லைக்கா நிறுவனமே தயாரிக்க இருக்கின்றது. இதையடுத்து ரஜினி லோகேஷ் கனகராஜின் இயக்கத்திலும் நடிப்பதாக தகவல்கள் வருகின்றன

​முடிவுஎந்திரன் படத்திற்கு பிறகு ரஜினிக்கு ஒரு மெகாஹிட் வெற்றி கிடைக்கவில்லை. குறிப்பாக அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியடைந்தது. எனவே ஒரு வெற்றிமட்டும் போதாது அடுத்தடுத்த வெற்றிகளை பெறவேண்டும் என ரஜினி தற்போது முடிவெடுத்துள்ளார். அதன் காரணமாகவே தொடர்ந்து தரமான இயக்குனர்களுடன் ரஜினி கைகோர்த்து வருகின்றார். நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினி ,அடுத்ததாக ஞானவேல், லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்கவுள்ளார். எனவே இப்படங்களின் மூலம் தொடர் வெற்றிகளை பெற்று தான் நிரந்தர சூப்பர்ஸ்டார் என நிரூபிக்கும் முனைப்பில் இருக்கின்றார் ரஜினி

​கதைக்களம்ஜெய் பீம் என்ற படத்தை இயக்கி பிரபலமான ஞானவேலுடன் ரஜினி இணைகிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு இரட்டிப்பானது. கண்டிப்பாக இவர்கள் இணையும் இப்படம் புரட்சிகரமான படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் கதை பற்றிய தகவல் இணையத்தில் லீக்காகியுள்ளது. படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். மேலும் பாட்ஷா படத்திற்கு பிறகு இப்படத்தில் ரஜினி முஸ்லீம் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றார் என தகவல் வந்தது.மேலும் இப்படம் என்கவுண்டருக்கு எதிராக ரஜினி போராடுவது போல கதைக்களம் இருக்குமாம். ஜெய் பீம் போல இப்படமும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வருவதாக தகவல்கள் வருகின்றன

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.