மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்ட விடுமுறைப் பட்டியலின்படி தெரியவந்துள்ளது.
மாதத்தின் தொடக்க நாளே விடுமுறைதான். தொழிலாளர் தினம் என்பதால் மே 1ஆம் தேதி நாடு முழுவதும் விடுமுறை. மே 5ஆம் தேதி புத்த பூர்ணிமா என்பதால், டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், உத்தரகண்ட், அசாம், பீகார், குஜராத், அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விடுமுறை.
மே 7 – ஞாயிறு, மே 9 – ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள், மே – 13 இரண்டாவது சனிக்கிழமை, மே 14 – ஞாயிறு, மே 16 – மாநில நாள் – சிக்கிம், மே 21 – ஞாயிறு, மே 22 – மகாராணா பிரதாப் ஜெயந்தி – குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தானில் விடுமுறை.
மே 24 – காசி நஸ்ருல் இஸ்லாம் ஜெயந்தி – திரிபுராவில் விடுமுறை. மே 27 – நான்காவது சனிக்கிழமை, மே 28 – ஞாயிறு ஆகிய 12 நாட்கள் வங்கிகள் வேலை செய்யாது.
ஆனாலும் ஆன்லைன் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் நேரடியாக வங்கியில் இருந்து பணத்தை டெபாசிட் செய்யவோ எடுக்கவோ முடியாது, ஆனால் மீதமுள்ள இணைய சேவைகளை எந்த சிரமமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த விடுமுறை ஒவ்வொரு மாநிலத்திற்கும் அல்லது மண்டலத்திற்கும் மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in