இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு அதிக மோகம் உள்ளது. ஆனால் அவற்றின் விலை அதிகமாக இருப்பதால் அவற்றை யாரும் எளிதில் வாங்க முடியாது. ஒருவேளை உங்களுக்கும் ஆப்பிள் ஐபோன் வாங்குவது கனவாக இருந்தால், அதனை இஎம்ஐ மூலம் வாங்குவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
EMI என்பது, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் நிலையான கட்டணத் தொகையை செலுத்த வேண்டும். தவணை முடியும் வரை பணத்தை செலுத்த வேண்டியிருக்கும். EMI-ல் அசல் தொகை மற்றும் நிலுவையில் உள்ள கடன் தொகையின் வட்டி ஆகிய இரண்டையும் சேர்த்து கட்டுவீர்கள்.
ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.apple.com/) கிடைக்கும் தகவலின்படி, தகுதியான HDFC வங்கி கார்டுகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளில் வாடிக்கையாளர்கள் பலன்களைப் பெறலாம். இதனுடன், பெரும்பாலான வங்கிகளில் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் கிடைக்கிறது. இது தவிர, ஆப்பிள் ஸ்டோரில் தகுதியான Mac, iPad அல்லது Apple Watch-ஐ மாற்றிக் கொள்ளலாம். இதற்கு நல்ல தள்ளுபடியும் உள்ளது.
EMI-ல் ஐபோனை வாங்குவது எப்படி?
– நீங்கள் வாங்க விரும்பும் ஐபோன் மாடலைத் தேர்ந்தெடுத்து அதன் விலையைச் சரிபார்க்கவும்.
– அந்த ஐபோன் மாடல் EMI-ல் கிடைக்கிறதா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும்.
– உங்கள் பட்ஜெட் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறனுக்கு ஏற்ற பொருத்தமான EMI திட்டத்தைத் தேர்வு செய்யவும்.
– வட்டி விகிதம், செயலாக்கக் கட்டணம் மற்றும் EMI திட்டத்தின் காலம் ஆகியவற்றைச் சரிபார்க்கவும்.
– நீங்கள் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து ஐபோனை வாங்குகிறீர்கள் என்றால், EMI கட்டண விருப்பத்தைத் தேர்வுசெய்து, EMI கட்டணத்தைத் தொடர உங்களுக்கு விருப்பமான வங்கியைத் தேர்வுசெய்யவும்.
– நீங்கள் ஆஃப்லைன் ஸ்டோரிலிருந்து ஐபோனை வாங்குகிறீர்கள் என்றால், விற்பனையாளர் EMI செலுத்தும் செயல்முறைக்கு உங்களுக்கு உதவுவார்.