இலங்கை அரச தொலைக்காட்சியொன்றில் பெண் ஊடகவியலாளர் மீது பாலியல் துன்புறுத்தல்: வெளியான தகவல்


இலங்கை அரச தொலைகாட்சியொன்றில் பணிபுரியும் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பான விசாரணையை உடனடியாக ஆரம்பிக்குமாறு அத்தொலைகாட்சி நிறுவனத்தின் பொது முகாமையாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரச தொலைக்காட்சியொன்றில் பெண் ஊடகவியலாளர் மீது பாலியல் துன்புறுத்தல்: வெளியான தகவல் | Sexual Harassment Of State Tv Presenter

பாலியல் துன்புறுத்தல்

குறித்த பெண் ஊடகவியலாளர், அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடமிருந்து தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதாக சமீபத்தில் குற்றம் சாட்டியுள்ளார். 

பாலியல் துன்புறுத்தல் புகார்கள் குறித்து ஆதாரங்கள், குரல் பதிவுகள் மற்றும் காணொளி பதிவுகளுடன் அதிகாரிகளிடம் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். 

இந்நிலையில், தன் சுயமரியாதையை காக்கவே பணியை விட்டு விலக முடிவு செய்ததாக குறித்த பெண் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். 

மேலும் அத்தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் தொடர்ந்து இதுபோன்ற துன்புறுத்தல்களை சந்திக்கும் சூழல் உள்ளது  என்றும் குற்றம் சாட்டிள்ளார்.

இலங்கை அரச தொலைக்காட்சியொன்றில் பெண் ஊடகவியலாளர் மீது பாலியல் துன்புறுத்தல்: வெளியான தகவல் | Sexual Harassment Of State Tv Presenter

வெளிப்புற விசாரணை

குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த நிறுவனத்தின் தலைவர், தமது நிர்வாகம் வெளிப்புற விசாரணை அதிகாரியைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஒரு அறிக்கையை வெளியிட்ட ஊடக ஊழியர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, பாதிக்கப்பட்ட பெண்ணின் துணிச்சலையும், “காட்டுமிராண்டித்தனமான செயலை” அச்சமின்றி அம்பலப்படுத்த அவர் எடுத்த நடவடிக்கைகளையும் பாராட்டியுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.