பொதுவாக தோசை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதுவும் மிகவும் சத்துமிக்க கேழ்வரகு,கொள்ளு என்பவற்றை உபயோகித்து தோசை செய்து சாப்பிட்டால் எப்படியிருக்கும்?
இனி கேழ்வரகு கொள்ளு தோசை எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்…
image – Yummy Tummy Arthi
தேவையான பொருட்கள்
கொள்ளு – கால் கப்
கேழ்வரகு – 1 கப்
வெந்தயம் – 1 தேக்கரண்டி
சவ்வரிசி – 2 தேக்கரண்டி
நெய் அல்லது நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
image – TastyBudsRecepie
செய்முறை
முதலில் கொள்ளு, கேழ்வரகு, வெந்தயம், சவ்வரிசியை நன்றாக கழுவி விட்டு, 8 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
பின்னர் ஊறவைத்ததை மிக்சியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
அதன்பின்னர் அரைத்த மாவில் உப்பு சேர்த்து அதை புளிக்கவிடவும்.
பின்னர் தோசைக் கல்லில் மெல்லிய தோசையாக சுட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிடவும்.
அருமையான கேழ்வரகு கொள்ளு தோசை தயார்.
image – Dosaikal