சீட் பேரம்… கோடி கோடியாய் பணம்… திமுக கூட்டணி கட்சிகளின் கவலை… வானதி சீனிவாசன் பகீர்!

தமிழகத்தை ஆளும் முதல்வர்

தலைமையிலான திமுக அரசு விரைவில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது. இந்த சூழலில் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்குவது சற்றே பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் 12 மணி நேர வேலை சட்ட முன்வடிவை கொண்டு வந்து அரசியல் கட்சிகளின் பலத்த எதிர்ப்பை சம்பாதித்தனர். தொடர் போராட்டம், வேலைநிறுத்தம், கூட்டணி கட்சிகள் அழுத்தம் போன்ற நெருக்கடிகளால் சட்ட முன்வடிவின் செயலாக்கத்தை திமுக அரசு நிறுத்தி வைத்துவிட்டது.

சர்ச்சையில் திமுக அரசு

இதையடுத்து திருமண மண்டபங்களில் மதுபான விநியோகம் என்ற அறிவிப்பை வெளியிட்டு பின் வாங்கிவிட்டனர். இதற்கிடையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ வெளியாகி திமுக முதல் குடும்பத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்தா? என திகைக்க வைத்துள்ளது. இந்நிலையில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் தலைப்பே கவனம் பெற்றுள்ளது. அதாவது, முதல்வரை காப்பாற்ற திமுகவின் கூட்டணி கட்சிகள் முயற்சிப்பது ஏன்?

வானதி சீனிவாசன் கேள்வி

திமுக அரசை வெளி சக்திகள் இயக்குகிறதா? எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த 2 ஆண்டுகளில் இதுபோல ஓர் அறிவிப்பை, ஓர் உத்தரவை, ஓர் அரசாணையை வெளியிட்டு விட்டு திரும்பப் பெறுவது ஏற்கனவே நடந்துள்ளது. திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளுக்கு இதை விட சிறந்த உதாரணம் எதுவும் இருக்க முடியாது. திருமண மண்டபங்களில் விருந்து நிகழ்ச்சிகளில் மதுபானங்களுக்கு அனுமதி என முடிவெடுத்துள்ளனர். தமிழ் கலாச்சாரத்தை நன்கு அறிந்த ஒருவரால் நிச்சயமாக இந்த முடிவை எடுத்திருக்கவே முடியாது.

மது விநியோகம்

ஏழை, நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை அறிந்திடாத ஓர் அரசு தமிழகத்தில் இருக்கிறது என்பதற்கு இந்த அரசாணையே சிறந்த எடுத்துக்காட்டு. தமிழ் மக்களிடம் ஏற்பட்ட கடும் கொந்தளிப்பு, திமுக அரசை பணிய வைத்திருக்கிறது. ஒருபக்கம் சட்டமன்றத்தில் 500 மதுக்கடைகளை குறைப்போம் என்று அறிவித்தனர். மறுபக்கம் மதுவை ஆறாக ஓட விடும் திட்டத்தை அறிவித்துள்ளனர். இப்படி மக்களை முட்டாள் ஆக்க நினைக்கிறது திமுக அரசு. தகவல் தொழில்நுட்ப புரட்சி யுகத்தில் உண்மையை ஒரு நொடியில் மக்கள் அறிந்து கொள்வர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக கூட்டணி கட்சிகள்

மேலும், திமுக அரசின் முடிவுகளுக்கு தமிழக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பும் போதெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியாமல் நடந்து விட்டது என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் முயற்சிக்கின்றன. இதற்காக முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுப்பது, கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பது, முதல்வருக்கு வக்காலத்து வாங்குவது என நாடகத்தை அரங்கேற்று கின்றனர். இதன் பின்னணியில் சில விஷயங்கள் இருக்கின்றன.

மக்களவை தேர்தல்

கடந்த மக்களவை தேர்தலை போலவே திமுகவிடம் இருந்து அதிக தொகுதிகளை பெற வேண்டும். கோடிக்கணக்கில் பணம் பெற வேண்டும் என்ற கவலை திமுக கூட்டணி கட்சிகளுக்கு இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக மக்களை ஏமாற்ற நினைத்தால் அது நடக்காது. ஒருவேளை முதல்வருக்கு தெரியாமல் நடந்து விட்டது என்றால், தமிழகத்தில் உள்ள திமுக அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்குகிறதா? இல்லை வெளியில் இருந்து வேறு சில சக்திகள் அரசை இயக்குகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.