இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
அந்நாட்டு நேரப்படி அதிகாலை 3 மணிக்கு, சுமத்ரா தீவில் 84 கிலோ மீட்டர் ஆழத்தில், 7.3 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பலமுறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கரையோரம் வசிக்கும் மக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டது.
உடனடியாக மக்கள் தங்களது உடமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு சென்ற நிலையில், 2 மணி நேரத்திற்கு பின்னர் சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டது.