சிங்கப்பூர், மலேஷியாவில் இருந்து சிங்கப்பூருக்கு, செல்லப்பிராணிகளை கடத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு, 12 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில் வசித்து வருபவர், கோபிசுவரன் பரமன் சிவன், 36.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், 2022 அக்., 18ல், மலேஷியாவில் இருந்து, அதன் அண்டை நாடான சிங்கப்பூருக்கு, லாரி வாயிலாக, 28 நாய்க்குட்டிகள் மற்றும் ஒரு பூனையை கடத்திச் சென்றார்.
சிங்கப்பூரின் துவாஸ் சோதனைச்சாவடியில், லாரியை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில், சலவைப் பைகளில் செல்லப்பிராணிகள் அடைத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து கோபிசுவரன் பரமன் சிவனை, சிங்கப்பூர் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கை, சிங்கப்பூர் தேசிய பூங்கா வாரியம் விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்த வாரியம், ‘செல்லப்பிராணிகளில் கடத்தலில் இந்த வழக்கு மிகவும் முக்கியமானது’ என தெரிவித்து, கோபிசுவரன் பரமன் சிவனுக்கு, 12 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement