தமிழை அலுவல் மொழியாக மாற்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.!
இந்தியாவில் ராஜஸ்தான், அலகாபாத், மத்திய பிரதேசம் மற்றும் பாட்னா உள்ளிட்ட நீதிமன்றங்களில் அந்தந்த மாநிலங்களில் பேசுகின்ற இந்தியை வழக்காடு மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் இந்தி பேசாத பிற மாநிலங்களில் அம்மாநிலத்தின் மொழிகளை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
அதன் படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற ஆவின் நுழைவு வாயில் அருகே வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பொது செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். அதில் கலந்துகொண்ட வழக்கறிஞர்கள், “மக்களின் மொழியில் நீதி பரிபாலனம் வழங்கும் போது, சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயகமும் காக்கப்படும்.
சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பலநூறு கோடிகள் ஒதுக்கியது. ஆனால், அந்தந்த மாநில மொழிகளில் நீதிமன்றங்கள் செயல்படுவதற்கு நிதி ஒதுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்தனர்.