தமிழ்நாட்டில் தடை தொடர்கிறது… அமைச்சர் எச்சரிக்கை!!

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா மீதான தடை தொடர்வதால், பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் குட்கா பொருள்களுக்கு தடை விதித்து கடந்த 2018-ஆம் ஆண்டு மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மக்களை பாதுகாக்கவே புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது என்று கூறினார்.

புகையிலை பொருட்களால் புற்றுநோய் போன்றவை ஏற்படுகின்றன. புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கும் போது ஒரு வருடத்திற்கு அறிவிப்பாணை வெளியிட்டு பின்னர் அது வருடந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உத்தநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், குட்கா பொருள்களுக்கு தடை விதித்து புதிய அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா மீதான தடை தொடர்வதால், பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.