நாட்டில் அதிகமாக இருந்த மருந்து தட்டுப்பாடு இன்று வெகுவாக குறைந்துள்ளது – சுகாதார அமைச்சர் 

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு தற்போது 100-112க்கு இடையில் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் 169 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது நிலைமை மிகவும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று (25) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இந்த நாட்டில் மருந்து தட்டுப்பாடு வழமைக்கு திரும்பும் என்றும் அமைச்சர் கூறினார். குறிப்பாக கடந்த பத்து வருடங்களை பின்னோக்கிப் பார்க்கும் போது ​​நாட்டில் மருந்துகளின் தேவை 100ம% பூர்த்தி செய்யப்படவில்லை எனவும், குறிப்பிட்ட அளவு மருந்துப் பற்றாக்குறை எப்போதும் காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளின் எண்ணிக்கை 383 ஆகவும், உயிர் காக்கும் மருந்துகளின் எண்ணிக்கை 14 ஆகவும் உள்ளது. நாட்டில் உயிர்காக்கும் மருந்துகளின் அளவு குறைவில்லாமல் தொடர்ச்சியாக இருந்ததை சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சர், தற்போது அந்த மருந்துகள் அனைத்தும் சுகாதார அமைச்சிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

நோயாளர்களுக்குத் தேவையான பல மருந்துகள் நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அடுத்த இரண்டு வருடங்களில் நாட்டுக்குத் தேவையான மருந்துகளில் 40-50 வீதத்தை உற்பத்தி செய்ய முடியும் எனவும், தேவையான அனைத்து அடிப்படை வேலைத்திட்டங்களும்  அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கேற்ப அந்த இலக்கை அடைய முடியும் எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.