பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகுவதாக கோபி உருக்கம்: காரணம் இது தான்


விஜய் டீவியின் மிக பிரபல சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் சதீஷ்குமார், தற்போது தொடரை விட்டு விலகுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

பிரபலமான தொடர்

விஜய் டிவியில் பிரபலமான தொடரான பாக்கியலட்சுமி தொடர், திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகுவதாக கோபி உருக்கம்: காரணம் இது தான் | Bakiya Lakshmi Serial Actor Sathish Kumar Quits@hotstar

இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரமான பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா ஷெட்டி நடிக்கிறார். மேலும் கோபியாக நடிகர் சதீஷ்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

பிரபலமான மலையாள  சீரியலை தொடுத்து  தமிழில் எடுக்கப்பட்ட இந்த சீரியலுக்கு நிறைய ரசிகர்கள் பட்டாளமிருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகுவதாக கோபி உருக்கம்: காரணம் இது தான் | Bakiya Lakshmi Serial Actor Sathish Kumar Quits@twitter

பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு முன்னாள் காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் கோபி, தனது சிறப்பான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.

விலகுவதாக அறிவிப்பு

இந்நிலையில் தற்போது கோபி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சதீஷ்குமார், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் தான் இன்னும் 10 அல்லது 15 எபிசோடுகளுக்கு பின் பாக்கியலட்சுமி தொடரிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் கோபி கதாபாத்திரத்திலிருந்து விலவதாக கூறியவர், தனக்கு  தனிப்பட்ட முறையில்
நிறைய பிரச்சனைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் வாய்ப்பளித்த விஜய் தொலைக்காட்சி குழுமத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகுவதாக கோபி உருக்கம்: காரணம் இது தான் | Bakiya Lakshmi Serial Actor Sathish Kumar Quits@twitter

’சுமாராக நடித்தாலும் முடிந்த அளவு மக்கள் என் நடிப்பை பாராட்டியிருக்கிறார்கள். என் மேல் அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி’ என கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த வீடியோ வெளியான பின்பு பாக்கியலட்சுமி சீரியல்  ரசிகர்கள் மத்தியில்  பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.    





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.