
மே மாதம் 5-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுருந்தது. மே 7-ம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களை பாதிக்கும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வு முடிந்த பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடலாமா என்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் 5-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுருந்த நிலையில், தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.