மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதில் பாஜகவிற்கு விருப்பமில்லையென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
கர்நாடக மாநிலத்தில் 2 நாள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அமித்ஷா, முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை கர்நாடக அரசு ரத்து செய்திருப்பது குறித்து இக்கருத்தினை தெரிவித்தார்.
தேவரா ஹிப்பர்கி, பாகல்கோட் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அமித்ஷா, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வாரிசு அரசியல் தான் உச்சத்தில் இருக்கும் எனவும் கர்நாடகா கலவரங்களால் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், கர்நாடகாவை ரிவர்ஸ் கியரில் காங்கிரஸ் பின்னோக்கி இழுத்துச் சென்று விடும் என்றும் அமித்ஷா கூறினார்.