மத்தியில் காங். ஆட்சியமைத்தால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்யப்படும் – ராகுல் காந்தி

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைத்தால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமைப்பு முறையில் மாற்றம் செய்யப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர், நாட்டில் உள்ள வசதிபடைத்தவர்களுக்கு ஆதரவாகவே ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

ஜி.எஸ்.டி. தாக்கல் செய்யும் முறை பெருவாரியான மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாகக் கூறிய அவர், இதனால் சிறு வணிகர்கள் கடுமையான பாதிப்பை சந்திப்பதாகவும் விமர்சித்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.