இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் நேற்று நள்ளிரவு நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ரம்ஜானுக்கு இரு தினங்கள் கழித்து தீவிரவாதிகள் இந்தக் கொடூர தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர்.
தமிழகத்தை போல தேர்தல் நிறுத்தம் இந்தியாவில் வேறெங்கும் நடக்கவில்லை….! – அண்ணாமலை
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
ஏற்கனவே கடும் பஞ்சத்தில் வாடும் பாகிஸ்தானில், தொடர்ச்சியாக தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவது அந்நாட்டு மக்களை விரக்தி அடையச் செய்துள்ளது.
பாகிஸ்தானில் சமீபகாலமாக தீவிரவாத தாக்குதல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததை அடுத்து, இந்த தாக்குதல்கள் அதிகரித்து இருக்கின்றன.
ஆப்கன் கொடுத்த ஆசை:
ஆப்கானிஸ்தானை போல பாகிஸ்தானிலும் நாம் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற உத்வேகத்தில் தீவிரவாதிகள் இதுபோன்ற நாசவேலைகளில் ஈடுபட்டு வருவதாக உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இரண்டு மாதங்களுக்கு முன்பு பெஷாவர் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அதிகாலையில் பயங்கரம்:
அந்த வகையில், இன்று ஒரு பயங்கரவாத தாக்குதல் அங்கு அரங்கேறியுள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் தீவிரவாத தடுப்பு காவல் நிலையம் இயங்கி வருகிறது. ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே அமைந்திருக்கும் இந்தப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால், இங்கு தீவிரவாத தடுப்பு காவல் நிலையங்கள் அதிக அளவில் இயங்கி வருகின்றன.
13 பேர் பலி..
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 1 மணியளவில் ஒரு காவல் நிலையத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த சத்தத்தை அப்பகுதி மக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். இந்த குண்டுவெடிப்பில் 13 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 11 போலீஸார் அடங்குவர். அந்த வழியாக நடந்து சென்ற ஒரு பெண்ணும், அவரது 1 வயது குழந்தையும் இந்த குண்டுவெடிப்புக்கு பலியாகினர். 50-க்கும் மேற்பட்ட போலீஸாரும், பொதுமக்களும் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் தாலிபான்கள்:
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து அங்கு வந்த ராணுவத்தினர், அங்கு தீவிர சோதனை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், தீவிரவாதி ஒருவன் தனது உடலில் வெகுண்டை கட்டி வந்து காவல் நிலையத்தின் ஆயுதக் கிடங்கில் விழுந்து வெகுண்டை வெடிக்கச் செய்திருப்பது தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத போதிலும், பாகிஸ்தான் தாலிபான்களே (தெஹ்ரிக் இ- தாலிபான் பாகிஸ்தான்) இந்த தாக்குதலை நடத்தி இருப்பார்கள் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.