26 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் பலாலி அந்தோனிபுரம் கடற்கரைப் பகுதியில் 2023 ஏப்ரல் 23 ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 26 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுபடுத்த தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி கடற்படை பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்திக்கு சொந்தமான வெத்தலகேணி மற்றும் பருத்தித்துறை கடற்படை பிரிவுகளின் கடற்படையினர் P055 கரையோர ரோந்து கப்பலை பயன்படுத்தி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒருவரை (01) சோதனை செய்தனர். அங்கு, சந்தேக நபரால் தெப்பம் வகையில் படகொன்றில் விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட பதின்மூன்று (13) பார்சல்களில் பொதி செய்யப்பட்ட 26 கிலோ 170 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதியில் மொத்த வீதி பெறுமதி 08 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என நம்பப்படுகிறது.

மேலும், கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (01) பலாலி, அந்தோனிபுரம் பகுதியைச் சேர்ந்த இருபத்தொரு (21) வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் (01) மற்றும் 26 கிலோ 170 கிராம் கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பலாலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.