இஸ்லாமாபாத், பாகிஸ்தானில், 6 வயது ஹிந்து சிறுமியை, இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் சைக் பீர்கியோ என்ற கிராமத்தில் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஒரு வீட்டிற்கு வெளியே, 6 வயது சிறுமி, சமீபத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள், அச்சிறுமியை கடத்திச் சென்றதுடன் பாலியல் பலாத்காரமும் செய்து தப்பிச் சென்றனர். இதனால் அச்சிறுமி அங்கேயே மயங்கி விழுந்தார்.
இதற்கிடையே அச்சிறுமியை காணாமல் அவரது பெற்றோர், பல இடங்களிலும் தேடி உள்ளனர்.
இந்நிலையில், அவர்களின் வீட்டில் இருந்து 6 கி.மீ., தொலைவில் மயங்கிய நிலையில் சிறுமி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின், சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தாலும், மெத்தனப்போக்குடன் வழக்கை கையாண்டதுடன், குற்றவாளிகளை பிடிப்பதிலும் போலீசார் தாமதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இறுதியாக, சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுபோல், பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மையின மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதுடன், பல்வேறு சித்ரவதைகளுக்கும் உள்ளாக்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement