9ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை-உதகையில் அதிர்ச்சி

உதகை அருகே பைகாராவில் பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் தலைமறைவான குற்றவாளியை தேடி வருகின்றனர்.

நேற்று பள்ளிக்குச் சென்ற மாணவி நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பள்ளி உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தி மாணவியை தேடி வந்தபோது, வழக்கமாக வீட்டிற்கு செல்லும் சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பலத்த காயங்களுடன் மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் பரிசோதித்ததில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாகவும், உடற்கூராய்வு முடிந்த பின்னரே முழு விவரங்கள் தெரியவரும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடன் பயிலும் சக மாணவிகளிடம் விசாரித்ததில் மாணவி பள்ளியிலிருந்து திரும்பும்போது உறவினரான ராஜேஷ் குட்டன் என்பவரின் காரில் சென்றது தெரியவந்துள்ளது.  இதையடுத்து அந்த காரை கைப்பற்றியுள்ள போலீசார், தலைமறைவான இளைஞரை தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.