சென்னை : நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட ஹாட் போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வெளிநாட்டு நடிகையான எமி ஜாக்சன். விஜய், தனுஷ், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
காதலுடன் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர், திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தையை பெற்றுக்கொண்டார்.
நடிகை எமி ஜாக்சன் : ஹாலிவுட் மாடலான எமி ஜாக்சன் ஹாலிவுட் சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு புயலாய் வந்தார். தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டிணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தைத் தொடர்ந்து விக்ரமுடன் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட பல படங்களில் எமி ஜாக்சன் நடித்தார்.
ஆண் குழந்தை : தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருந்த போதே, ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து வந்தனர். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருமணத்திற்கு முன்பே ஆண் குழந்தையை பெற்றேடுத்தார்.
புது காதலர் : இதையடுத்து, இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தன. இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து ஜார்ஜின் புகைப்படங்களையும் அவரின் பெயரை நீக்கினார். இதனால், இருவரும் பிரிந்து விட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது எமி, பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
வெறும் துண்டுதான் : இணையத்தில் எப்போது, சுறுசுறுப்பாக இருக்கும் இவர் உள்ளாடை எதுவுமே போடாமல் வெறும் துண்டை மட்டும் போர்த்திக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவைப்பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எமி தற்போது ‘மிஷன் சேப்டர் 1’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இதில் ஹீரோவாக அருண் விஜய் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.