Dhanush's Captain Miller – தனுஷின் கேப்டன் மில்லருக்கு சிக்கல் – எதனால் தெரியுமா?

தென்காசி: Dhanush’s Captain Miller (தனுஷின் கேப்டன் மில்லர்) தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்துக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்த இடங்களுக்கு அவர் சென்றுவிட்டார். இதனால் அவருக்கென்று ரசிகர் பட்டாளம் இருக்கிறது. முக்கியமாக இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்று தனுஷ் பெயரும் பெற்றிருக்கிறார்.

வாத்தி தனுஷ்: தனுஷ் சமீபத்தில் நடித்து வெளியான படம் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படத்தில் சம்யுக்தா, சமுத்திரகனி, கென் கருணாஸ், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் தமிழ் – தெலுங்கு என பைலிங்குவலாக உருவாகியிருந்தது.

இதன் மூலம் இத்தனை வருடங்கள் தெலுங்கில் அறிமுகமாகாமல் இருந்த தனுஷ் தற்போது டோலிவுட்டிலும் அறிமுகமாகியிருக்கிறார். இருப்பினும் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கிறது.

கேப்டன் மில்லரில் தனுஷ்: வாத்தி படத்துக்கு பிறகு தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை சாணிக்காயிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

பீரியட் படமாக இந்தப் படம் உருவாகும் என கூறப்பட்டிருப்பதால் இந்தப் படத்தின் மீது தனுஷ் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி முதல் இரண்டு படங்களில் கவனம் ஈர்த்த அருண் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தன்னை நிரூபிப்பார் எனவும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

District Collector of Tenkasi ordered to stop the shooting of Captain Miller

தென்காசியில் ஷூட்டிங்: கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் தென்காசியில் நடைபெற்றுவந்தது. அங்கு படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுவந்தன. தனுஷ் உள்ளிட்டோரும் அங்கு நடந்த ஷூட்டிங்கில் கலந்துகொண்டனர். அதேசமயம், கடுமையான வெயில் காரணமாக படத்தில் பணிபுரிந்தவர்கள் சிலர் மயங்கி விழுந்ததாகவும், அதனால் படத்தின் ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் சில நாள்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

படப்பிடிப்பை நிறுத்த உத்தரவு: இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பை நிறுத்துவதற்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ஷூட்டிங் நடந்துவந்தது. அப்போது குண்டு வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஷூட்டிங் நடந்த இடத்துக்கு அருகில் இருப்பவர்கள் அச்சம் அடைந்திருக்கின்றனர்.

இதற்கிடையே அங்கு ஷூட்டிங் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்திடமோ, வனத்துறையிடமோ படக்குழு அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியில் ஷூட்டிங் நடத்தக்கூடாது எனவும், உடனடியாக ஷூட்டிங்கை நிறுத்த வேண்டும் என்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.