IPL 2023 பிறகு ஜியோ சினிமா இலவசம் கிடையாது! ஒரு நாளைக்கு 2 ரூபாய் மட்டுமே கட்டணம்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
ஐபில் 2023 போட்டிகளுக்கு பிறகு இனி Jio Cinema இலவசமாக பார்க்கமுடியாது என்று தெரிகிறது. இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் ஆப்களில் ஒன்றாக இருக்கும்
Jio Cinema விளையாட்டு,
திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஆவண படங்கள் என பலவகையான ஸ்ட்ரீமிங் கன்டென்ட் வைத்துள்ளது.

முதல் முதலான FiFA 2022 கால்பந்து உலகக்கோப்பை ஒலிபரப்பு மூலம் சாதனை படைத்த Jio Cinema அடுத்ததாக இந்தியாவின் மிகவும் பிரபலமான விளையாட்டு தொடராக இருக்கும் ஐபில் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை பெற்றது.

அதிலும் முதல் முறையாக 4k தரத்தில் நேரலை செய்து சாதனை புரிந்துள்ளது. இதை தற்போது மக்கள் இலவசமாக கண்டுகளித்துவருகிறார்கள். ஆனால் இது விரைவில் முடிவிற்கு வரப்போகிறது. இதற்கு சந்தா திட்டத்தை ஜியோ நிறுவனம் விரைவில் அறிவிக்க முடிவெடுத்துள்ளது.

அதாவது Daily, Gold, Platinum என மூன்று திட்டங்களாக இது அறிவிக்கப்படும் என்றும் Reddit பயனாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதுபற்றி
Jio cinema
இன்றுவரை அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை.

Daily Delight

ஒரு நாளைக்கு 29 ரூபாய் என்று இருக்கும் இந்த திட்டம் தொடக்கத்தில் வெறும் 2 ரூபாய்க்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை 2 மணிநேரத்திற்கு இரண்டு சாதனைகளில் பயன்படுத்தலாம்.

Gold Standard

299 ரூபாய் திட்டமான இது தொடக்கத்தில் வெறும் 99 ரூபாய்க்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதில் மூன்று மாதங்களுக்கு இரண்டு கருவிகளில் ஸ்ட்ரீமிங் செய்யமுடியும்.

Platinum Power

இந்த திட்டம் இருப்பதிலேயே தலைசிறந்த வருட திட்டம் ஆகும். இதன் கட்டணம் 1,199 ரூபாய் என்று உள்ளது. இதை தொடக்க கால சலுகையாக வெறும் 599 ரூபாய்க்கு பெறமுடியும். இதில் நேரலை தவிர வேறு எதற்கும் விளம்பரங்கள் இல்லாமல் நான்கு கருவிகள் வரை ஸ்ட்ரீமிங் செய்யலாம்.

இந்த திட்டங்கள் அனைத்தும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இவை IPL 2023 போட்டிகள் முடிவடைந்த பிறகு அறிவிக்கப்படும் என்றும் அதுவரை இலவசமாக போட்டிகளை பார்த்து ரசிக்கலாம். மேலும் Jio சினிமாவில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் என பலவற்றை சேர்க்கவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.