Rajini: ரஜினியால் டோட்டலாக மாறிய ஷங்கர்..தயக்கத்தை தகர்த்தெறிந்த தலைவர்..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
தமிழ் சினிமாவை தன் ஒவ்வொரு படத்தின் மூலமும் அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்ற இயக்குனர்களில் ஒருவர் தான் ஷங்கர். என்னதான் ஷங்கர் கமர்ஷியல் படங்களை இயக்கினாலும் அதிலும் வித்யாசமான முயற்சியை அவர் கையாள தவறியதில்லை. அதன் காரணமாகவே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருகின்றார் ஷங்கர்.

ஜென்டில்மேன் படத்தில் துவங்கிய இவரது வெற்றிப்பயணம் தற்போதும் டாப் கியரில் தான்

சென்றுகொண்டிருக்கிறது. காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், சிவாஜி, எந்திரன் என இவர் இயக்கிய அனைத்து படங்களும் காலம் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடக்கூடிய படமாக இருக்கின்றது.

Leo: விஜய்யை கஷ்டப்பட்டு அதற்கு சம்மதிக்கவைத்தோம்..தயாரிப்பாளர் லலித் பேச்சு..!

தற்போது ராம் சரணை வைத்து game changer என்ற படத்தை இயக்கி வருகின்றார் ஷங்கர். இப்படம் அடுத்தாண்டு திரையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தன்னிடம் இருந்த கூச்சத்தையும், தயக்கத்தையும் ரஜினி தான் போக்கினார் என ஷங்கர் ஒரு பேட்டியில் பேசியிருந்தது தற்போது வைரலாகி வருகின்றது.

முதல்வன் படத்தின் மூலமே ரஜினியுடன் இணைய நினைத்தார் ஷங்கர். ஆனால் சில பல காரணங்களால் முதல்வன் படத்தில் ரஜினியால் நடிக்கமுடியவில்லை. இதையடுத்து சிவாஜி படத்தின் மூலம் இணைந்த இக்கூட்டணி தொடர்ந்து எந்திரன், 2 .0 என ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

சிவாஜி படத்தின் மூலம் புது புது வசூல் சாதனையை நிகழ்த்தி காட்டிய இக்கூட்டணி எந்திரன் படத்தின் மூலம் இந்திய சினிமாவையே வியக்கவைத்தது. இந்நிலையில் வெற்றிக்கூட்டணியாக வலம் வரும் ஷங்கர் மற்றும் ரஜினியின் முதல் சந்திப்பு பற்றிய தகவல் தற்போது வெளியாகிவுள்ளது.

அதாவது ஷங்கர் ஆரம்பகாலகட்டத்தில் அவ்வளவாக யாரிடமும் போய் பேசமாட்டாராம். தானாக போய் பேசுவதில் மிகுந்த தயக்கம் காட்டி வந்தாராம் ஷங்கர். நாமாக பேசினால் அவர்கள் சரியாக பேசுவார்களா என்ற தயக்கம் ஷங்கருக்கு இருந்ததாம். அந்த சமயத்தில் தான் ஒரு விழாவில் ரஜினியை சந்தித்தாராம் ஷங்கர்.

அதுவரை ரஜினியிடம் ஷங்கர் பேசியதும் கிடையாது, ரஜினியை பார்த்ததும் கிடையாது. எனவே ரஜினியிடம் போய் பேச தயக்கம் காட்டி ஒரு ஓரமாக நின்றுகொண்டிருந்தார் ஷங்கர். அப்போது ஷங்கரை பார்த்த ரஜினி தானாக வந்து ஷங்கரிடம் பேசினாராம். அவரை நலன் விசாரித்தது மட்டுமல்லாமல் உங்களின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லி அவரை மனதார பாராட்டியுள்ளார் ஷங்கர்.

இந்நிலையில் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் சூப்பர்ஸ்டாரான ரஜினியே எந்த வித தயக்கமும் காட்டாமல் தானாக வந்து பேசுவதை பார்த்து தன் தயக்கத்தை தகர்த்தெறிந்தாராம் ஷங்கர். அதன் பிறகு யாரை சந்தித்தாலும் அவராகவே போய் பேசிவருகின்றார் ஷங்கர். இந்த சம்பவத்தை ஷங்கரே ஒரு பெட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.