சென்னை: Simbu(சிம்பு) தனக்கு வந்திருக்கும் நிலையை நினைத்து நடிகர் சிம்பு கேரவனுக்குள் கதறி கதறி அழுத சம்பவம் தெரியவந்திருக்கிறது.
கோலிவுட்டில் பன்முக திறமைகளை கொண்ட நடிகர்களில் சிம்புவும் ஒருவர். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, சிறப்பாக நடனம் ஆடுவது என தான் இறங்கிய க்ரவுண்டில் எல்லாம் சிக்ஸர் அடித்தவர். ஆரம்பத்தில் அவர் நடித்த சில படங்கள் சரியாக போகாவிட்டாலும் சுதாரித்துக்கொண்ட அவர் அடுத்தடுத்து நடித்த படங்கள் ஹிட்டாகின. மேலும் சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என்றும் பெயர் எடுத்தவர் அவர்.
சிம்புவை சுற்றிய பிரச்னைகள்: சிம்புவுக்கு பெண் ரசிகைகள் ஏராளமாக இருக்கிறார்கள். இதனால் அவர் ஒரு சாக்லேட் பாய் என்ற இமேஜையும் பெற்றிருந்தார். சூழல் சுமூகமாக போய்க்கொண்டிருக்க நயன்தாராவுடன் காதலில் விழுந்து பிறகு அந்த உறவிலிருந்து பிரிந்தார். அதனையடுத்து ஹன்சிகாவை காதலித்த அவர் அந்த காதலில் இருந்தும் வெளியே வந்தார்.
ஒருபக்கம் காதல் பிரச்னைகள் தலைதூக்க மறுபக்கம் ஷூட்டிங் ஒழுங்காக வருவதில்லை, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்புவால் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என மறுபக்கம் தயாரிப்பாளரால் பிரச்னை வந்தது.
கவனம் சிதறிய சிம்பு: இதனையடுத்து திரைப்படங்களில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. மேலும் ஆன்மீகத்தை நோக்கியும் அவர் சென்றார். நிலைமை இப்படி இருக்க அவரது உடல் எடையும் பயங்கரமாக கூடியது. அப்படிப்பட்ட சமயத்தில்தான் வந்தா ராஜாவாதான் வருவேன், செக்கச்சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்தப் படங்களில் நடித்தபோது சிம்பு உடல் எடை அளவுக்கு அதிகமாகவே இருந்தது.

கதறி அழுத சிம்பு: நடனம் ஆடுவது என்றால் சிம்புவுக்கு கை வந்த கலை. ஆனால் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்தபோது ஒரு பாடலுக்கு அவரால் நடனமாட முடியவில்லை. இதனையடுத்து கேரவனுக்குள் சென்ற அவர், தன்னால் நடனம் ஆட முடியவில்லையே என கதறி அழுதிருக்கிறார். அதை பார்த்த நடன இயக்குநரிடம் என்னால் நடனம் ஆட முடியவில்லை எனவே நடன அசைவுகளை கொஞ்சம் எளிமைப்படுத்துங்கள் என்றிருக்கிறார்.
அதற்கு நடன அமைப்பாளரும் ஒத்துக்கொள்ள; சிம்பு இடையில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ‘இல்லை இதே இருக்கட்டும் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்கள்’ என கூறிவிட்டு சிறிது நேரத்திற்கு பிறகு வந்து கஷ்டப்பட்டு அந்த நடனத்தை ஆடி முடித்திருக்கிறார்.
செக்கச்சிவந்த வானம் படத்திலும்: அதேபோல் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்தபோது சிம்பு ஓடுவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சிம்புவால் ஓடக்கூட முடியவில்லையாம். இதனை நினைத்தும் பயங்கரமாக அழுத சிம்பு எப்படியாவது உடல் எடையை குறைத்து தரமான கம்பேக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்.
தரமான கம்பேக்: அவர் நினைத்தது போலவே கடுமையாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் நடித்தார். அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. அந்தப் படம் அவருக்கு தரமான கம்பேக்காக அமைந்தது. அதனையடுத்து அவர் நடித்த வெந்து தணிந்தது காடு சூப்பர் ஹிட்டடிக்க, பத்து தல படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.