மலையாள திரையுலகை சேர்ந்த இரண்டு பிரபல நடிகர்கள் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் இளம் நடிகர்களான ஷேன் நிகம், ஸ்ரீநாத் பாஷி ஆகிய இருவரும் வளர்ந்து வரும் கலைஞர்கள். ஆனால், இந்த இளம் வயதில் இருவரும் தடை செய்யப்படும் அளவுக்கு நடந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் கும்பலங்கி நைட்ஸ் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். வளர்ந்து வரும் நிலையில், இருவருக்கும் தடை விதித்து கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், கேரள திரைப்பட பணியாளர்கள் அமைப்பு மற்றும் மலையாள திரைப்பட நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளன.
ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாஷி ஆகிய இருவரும் போதைப் பொருள் பயன்படுத்திய பிறகு படப்பிடிப்பு தளத்துக்கு வருவதாகவும் பிற நடிகர்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த வருடம் செப்டம்பரில் ஸ்ரீநாத் பாஷி தொகுப்பாளருக்கு தொல்லை கொடுத்ததாகவும் அப்போது அவர் போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும் கைது செய்யப்பட்டார். அதே போல் நிறைய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளும் ஸ்ரீநாத், அவற்றுக்கு ஒரே தேதியை கொடுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
ஷேன் நிகம் வெயில் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, பாதியில் சென்று தனது ஹேர் ஸ்டைலை மாற்றியிருக்கிறார். இதுகுறித்து கேட்ட தயாரிப்பாளரை அவர் கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.
நீண்ட நாட்களாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து புகார்கள் வந்ததை அடுத்து, தற்போது கூட்டாக இரு நடிகர்களுக்கும் தடை விதித்து கேரள திரையுலகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
newstm.in