உக்ரைன் போரைத் தொடர்ந்து சீனா பக்கம் கவனத்தைத் திருப்பும் நாடுகள்: இப்போது ஜேர்மனி


உக்ரைன் போர் துவங்கியதிலிருந்தே பல நாடுகள் சீனா பக்கம் கவனத்தைத் திருப்பத் துவங்கியுள்ளதை பலரும் கவனித்திருக்கலாம்.

மார்ச் மாதம், ரஷ்ய ஜனாதிபதி புடினும் சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங்கும் ரஷ்யாவில் சந்தித்துப் பேசிக்கொண்டார்கள்.

சீன ஜனாதிபதியை சந்திக்கும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்

அதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் சீனாவுக்குச் சென்று சீன ஜனாதிபதியை சந்தித்தார்.
அத்துடன், ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbock சமீபத்தில் சீனா சென்றிருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், சீனா சென்று, சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.

உக்ரைன் போரைத் தொடர்ந்து சீனா பக்கம் கவனத்தைத் திருப்பும் நாடுகள்: இப்போது ஜேர்மனி | Countries Turning Attention To China

சீன பிரீமியருக்கு அழைப்பு

இந்நிலையில், ஜேர்மனிக்கு வருமாறு சீன மக்கள் குடியரசின் ஸ்டேட் கவுன்சிலின் பிரீமியரான Li Qiangக்கு தற்போது ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜூன் மாதம் 20ஆம் திகதி, இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக ஜேர்மன் தலைநகர் பெர்லின் வருமாறு சீன பிரீமியரான Li Qiangக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். 

உக்ரைன் போரைத் தொடர்ந்து சீனா பக்கம் கவனத்தைத் திருப்பும் நாடுகள்: இப்போது ஜேர்மனி | Countries Turning Attention To China



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.