நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் பேரிடர் காலங்களில் நிவாரண உதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு மேலும் குறைத்துள்ளது.
அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டின் மொத்த தேவையில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரேஷன் கடைகளில் சரியாக மண்ணெண்ணெய் வழங்கவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு வரும் நிலையில் தற்போது மத்திய அரசு மண்ணெண்ணெய் விநியோகத்தை குறைத்து இருப்பது பொது மக்களுடைய அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.