குருநகர் கடற்கரையை சுத்தம் செய்த இராணுவத்தினர்

புவி தினத்தை முன்னிட்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51 ஆவது காலாட்படை பிரிவின் படையினரால் யாழ் குருநகர் கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

படையினரால் (24) முன்னெடுக்கப்பட்ட இச் சமூகப் திட்டத்தில் கடற்கரையோரப் பகுதியில் காணப்பட்ட பொலித்தீன்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், வெற்று கேன்கள் மற்றும் ஏனைய குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த திட்டம், கரையோர மற்றும் கடல் வளங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றைப் பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

இத்திட்டத்தை வெற்றிகரமாக செய்வதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள கடற்படை, பொலிஸார், சாரணர் மற்றும் பொதுமக்களுடன் பெருமளவிலான படையினரும் இணைந்திருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.