புதுடில்லி: சத்தீஸ்கரில் நக்சல்கள் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடாவில், நக்சல்கள் மறைத்து வைத்திருந்த ஐஇடி வகை வெடிகுண்டு வெடித்ததில் 10 போலீசார் மற்றும் ஒரு டிரைவர் வீரமரணம் அடைந்தனர். இது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தலைவர்கள் கண்டனம்
பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை
தாண்டேவாடாவில் சத்தீஸ்கர் போலீசார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம். இந்த தாக்குதலில், உயிர்நீத்த தைரியமான போலீசாருக்கு எனது இரங்கலை தெரிவிக்கிறேன். அவர்களின் தியாகம் எப்போதும் நினைவில் வைத்து கொள்ளப்படும். அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சத்தீஸ்கர் போலீசார் மீது தாக்குதல் நடத்தியது கோழைத்தனமானது. உயிரிழந்த போலீசாரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன். மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என முதல்வரிடம் உறுதியளித்துள்ளேன் எனக்கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெலும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது கோழைத்தனமான தாக்குதல் எனவும், இதனை கண்டு அஞ்ச மாட்டோம் எனவும் கூறியுள்ளார்.
ஆலோசனை
இது குறித்து தகவல் அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெலுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தி
அங்கு நிலவும் சூழ்நிலையை கேட்டு அறிந்தார். மாநிலத்திற்கு தேவையான அனைத்து
உதவிகளையும் மத்திய அரசு செய்யும் எனவும் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement