புதுடில்லி: போர் நடக்கும் சூடானில் இருந்து, ‘ஆப்பரேஷன் காவிரி’ திட்டத்தின் வாயிலாக, முதற்கட்டமாக, 360 இந்தியர்கள் விமானம் வாயிலாக இன்று மீட்கப்பட்டனர்.
வட ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே, சமீபத்தில் மோதல் வெடித்தது. தலைநகர் கர்துாம் உட்பட பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதற்கிடையே, சூடானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்கும் திட்டத்திற்கு, ‘ஆப்பரேஷன் காவிரி’ என, மத்திய அரசு பெயர் வைத்துள்ளது.
இதன்படி, இந்தியர்களை மீட்கும் பணியில், நம் விமானப் படையின் இரண்டு விமானங்கள், சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலும், ஐ.என்.எஸ்., சுமேதா கப்பல், சூடான் துறைமுகத்திலும் நிலைநிறுத்தப்பட்டன.
இந்நிலையில் இன்று , ‘ஆப்பரேஷன் காவிரி’ திட்டத்தின் வாயிலாக, முதற்கட்டமாக, ஜெட்டாவிலிருந்து 360 இந்தியர்கள் விமானம் வாயிலாக மீட்கப்பட்டனர். அவர்கள் டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமானம் நிலையம் வந்திறங்கினர். அவர்களை மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளீதரன் வரவேற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement