
ஜப்பானில் 25 வாரங்களைக் கடந்த 'ஆர்ஆர்ஆர்'
ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படம் கடந்த வருடம் மார்ச் மாதம் 25ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியானது.
ஜப்பான் நாட்டில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 21ம் தேதி வெளியானது. 44 நகரங்களில் 209 தியேட்டர்களிலும், 31 ஐமேக்ஸ் தியேட்டர்களிலும் இதுவரை எந்த ஒரு இந்தியப் படமும் வெளியாகாத அளவுக்கு திரையிடப்பட்டது. படத்திற்கு ஜப்பான் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ரஜினிகாந்த் நடித்த 'முத்து' திரைப்படம்தான் ஜப்பான் நாட்டில் அதிக வசூலைக் குவித்த இந்தியப் படமாக இருந்தது. அந்த சாதனையை 'ஆர்ஆர்ஆர்' முறியடித்தது. தற்போது 25 வாரங்களைக் கடந்து 186வது நாளாக அங்கு படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவிலேயே இப்படம் இத்தனை வாரங்கள் ஓடாத நிலையில் ஜப்பான் நாட்டில் ஓடுவது குறிப்பிட வேண்டிய ஒன்று.